மகாசக்தி சங்கத்தினால் நடாத்தப்பட்ட கணனி பயிற்சியின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு

அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மகாசக்தி சிக்கன கழக கூட்டுறவு சங்கத்தினால் நடாத்தப்பட்ட கணனி பயிற்சியின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு இன்று (19.09.2019) காலை 11.00 மணியளவில் மகாசக்தி சங்கத்தின் தலைவி பியசேன மங்கையற்காரசி அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி.கலாதேவி உதயராஜ் அவர்களும் கௌரவ அதிதியாக மாவட்ட கூட்டுறவு உத்தியோகத்தர் யுனைதீன் அவர்களும் சிறப்பு அதிதியாக ஈசீ தொழிற்பயிற்சி நிலைய பணிப்பாளர் திருமதி. ஆர்.நியோமீ, மகாசக்தி சங்கத்தின் செயலாளர் திரு. ச.திலகராஜன்,மகாசக்தி சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினர் க .நவரத்தினம், மகாசக்தி சங்கத்தின் பொருளாளர் வினோத சுரேஷ்குமார் அவர்களும் மற்றும் மகாசக்தி ஊழியர்கள் ஈசீ தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் என்பவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.