மகாசக்தி கிராம பாலர் பாடசாலைக்கு ”சத்தியம்” வாழும்போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் மின் இணைப்பு வழங்கி வைக்கும் நிகழ்வு….

மகாசக்தி கிராம பாலர் பாடசாலைக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்வு நேற்றய தினம் (21) மாலை 3.30 மணியளவில் ”சத்தியம்” வாழும்போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.
லண்டனை சேர்ந்த நிர்மலன் அவர்களின் 60 வது பிறந்தினத்தை முன்னிட்டு பாலர் பாடசாலைக்கு நீண்ட கால தேவையாக இருந்த மின்சார இணைப்பினை உள்ளக மின் இணைப்புகள் மின் விளக்குகள் , மின் விசிறிகள் என மாணவர்களுக்கு தேவையான விடயங்களுக்கு பெருமனதுடன் அனுசரணையினை வழங்கி இருந்தார்.
இதன்போது நிர்மலன் அவர்களின் 60 வது பிறந்தினத்தை சிறப்பிக்கும் முகமாக மகாசக்தி கிராம பாலர் பாடசாலை ஆசிரியர், மாணவர்கள் இணைந்து கேக் வெட்டி தங்கள் மகிழ்வை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
இன் நிகழ்வில் S.திலகராஜன் செயலாளர் மற்றும் முகாமையாளர் மகாசக்தி சி.க.கூ.சங்கம், E.சுவர்ணராஜ் சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் மற்றும் M.தங்கேஸ்வரன் முன்னாள் அதிபர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.



