பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் க.பொ.த(சா/தர) மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சைக்கான வினாத்தாள் விநியோகம்….

சைவ முன்னேற்றச் சங்கம் பிரித்தானியாவினால் க.பொ.த (சா/தர) மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் வழங்கும் நிகழ்வு இன்று சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இப்பரீட்சை 12 மாவட்டங்களைச் சேர்ந்த 5692 க்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் இளங்கோவன் மற்றும் சைவ முன்னேற்றச் சங்கம் ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் சைவ முன்னேற்றச் சங்கத்தின் 44வது ஆண்டு விழாவை முன்னிட்டு மரநடுகை நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் சைவ முன்னேற்றச் சங்கத்தினால் தரம் – 5ம் ஆண்டு , க.பொ.த (சா/தர), மற்றும் க.பொ.தர (உயர்/தர) மாணவர்களுக்கான விசேட மாதிரிப் பரீட்சைகளை நடாத்துதல் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.