
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில நாட்களாக பல வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனால் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்துள்ளனர்.
எனவே, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.