ஆலையடிவேம்பு
தீர்மானம் எடுக்கப்பட்டு 10 நாட்கள் கடந்து வீதி மக்கள் பாவனைக்காக தயார்பாடுத்தி வழங்குவது என வேலைகள் இடம்பெற்று: தற்போது மக்கள் பாவனைக்காக வீதி இவ்வாறு இருக்கிறது.

– ம.கிரிசாந் –
அக்கரைப்பற்று 08 ஆம் பிரிவின் பிரதேச செயலக முன்வீதி (ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள வீதி) 23.01.2025 அன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலை 11 மாதம் கடந்தும் இன்னமும் நிறைவடையவில்லை சம்பந்தப்பட்டவர்கள் அசமந்தப்போக்காக செயற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதனை கடந்த (25.11.2025) அன்று பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச சபை தவிசாளர், சபை உறுப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என பலரும் பார்வையிட்டு உடனடியாக மக்கள் பாவனைக்கு தயார்படுத்தி வழங்கவேண்டும் என தீர்மானித்திருந்தார்கள்.
10 நாட்கள் கடந்து நேற்றயதினம் (05) மதியம் குறித்த வீதி மக்கள் பாவனைக்காக தயார்பாடுத்தி வழங்குவது என வேலைகள் இடம்பெற்றது.
நேற்று மாலை 5.00 மணியளவில் குறித்த பகுதி காணப்பட்ட நிலை புகைப்படத்தில் பார்க்கலாம்.




