திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டு கொவிட்பரவல் ஆரம்பம்: இம்மாதம் இன்று வரை 06 தொற்றாளர்கள் அடையாளம்.

ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேசத்தில் இம்மாதம் (20) இன்று வரை 06 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் தெரிவித்தார்.
இதில் இரண்டரை வயது குழந்தையும் பத்து வயது பாடசாலை மாணவியும் அடங்குவதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் கொவிட்19 தொற்றின் ஆட்டம் ஆரம்பித்துள்ளது இதனால் பொது மக்கள் மிக அவதானத்துடனும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் முகக்கவசத்துடன் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டும் மேலும் சுகாதார விதிமுறைகளை மிக இறுக்கமான முறையில் கடைபிடிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
மேலும் இது வரை தடுப்பூசி முறைப்படி தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் கட்டாயம் தடுப்பூசிகளை பெற்று கொள்ளுதல் வேண்டும் மற்றும் சனத்தொகை கூடிய இடங்கள் பொதுநிகழ்வுகள் போன்றவற்றில் கலந்து கொள்ளுவதை தவிர்தல் வேண்டும் என திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவித்தல் பாடசாலை மாணவர்கள் சுகாதார நடவடிக்கைகளை மிக இறுக்கமாக கடைபிடிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்முனை பிராந்தியத்தில் இதுவரை மூன்று கொவிட்-19 மரணங்கள்
பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.