திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டி வழங்கிவைப்பு…..

அம்பாறை திருக்கோவில் ஆதாரவைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டி ஒன்று நேற்றைய (03) தினம் வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வு திருக்கோவில் வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் Dr.A.B.மசூத் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக கிழக்குமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் Dr.A.R.M.தெளபிக் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்.Dr.I.L.ரிபாஸ்.
மேலும் இன்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் Mr.R.கமலராஜன்,திருக்கோவில் ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் A.B.மசூத், கல்முனை பிராந்திய பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் Dr.M.B.A.வாஜித், கல்முனை பிராந்திய சுகாதார திட்டமிடல் வைத்திய அதிகாரி Dr.M.C.M.மாகீர்.
மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் கணக்காளர்,நிறுவாக உத்தியோத்தர்கள்,வைத்தியசாலை அபிவிருத்தி குழுச் செயலாளர் Mr.ஜெகசுதன் (சட்டத்தரணி) வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.