இலங்கை
தங்கவேலாயுதபுரத்தில் சௌபாக்கிய திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு உளசமூக ரீதியான பிரச்சனைகளை மையப்படுத்திய சூழ்நிலைப் பகுப்பாய்வு…..

சமுர்த்தி மற்றும் வதிவிடப் பொருளாதார இராஜாங்க அமைச்சின் உளவளத்துணைப் பணிப்பாளர் அவர்களின் பணிப்புரையின் பெயரில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக தங்கவேலாயுதபுரத்தில் சௌபாக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருக்கின்றவர்களினுடைய உளசமூக ரீதியான பிரச்சனைகளை மையப்படுத்திய சூழ்நிலைப் பகுப்பாய்வு நடைபெற்றது.
இதில் மாவட்ட உளவளத்துணை இணைப்பாளர் மற்றும் ஏனைய உளவளத்துணை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தங்கவேலாயுதபுரம் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் புவன் அவர்களின் முழுமையான ஒத்துழைப்போடு இவ் நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் இவ் நிகழ்வில் அப் பயனாளிகளுக்கு உளசமூக ரீதியான பிரச்சினைக்கு தீர்வும் அறிவுரையும் வழங்கப்பட்டதுடன் அவர்களின் பிரச்சினைபற்றிய ஆராய்வும் அறிவுரையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.