உலகம்

டொனால்ட் டிரம்பின் 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக பதற்றம்!

அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பதற்றங்கள் நிலவுகிறது.

இதேவேளை, ஏற்கனவே உள்ள வணிக ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிக்காவிட்டால், அதற்குப் பதிலடி கொடுக்க எந்த முடிவையும் எடுக்கத் தயார் என இங்கிலாந்து எச்சரித்துள்ளது.

அமெரிக்க உச்ச நீதிமன்றம் பழைய வர்த்தக வரிகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, புதிய சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வரி விதிக்கப்படுவதால் சர்வதேச வர்த்தகத்தில் நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது.

இங்கிலாந்தின் முக்கிய ஏற்றுமதித் துறைகள் சிலவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், இந்த வரி உயர்வு இங்கிலாந்து பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே , ஐரோப்பிய ஒன்றியம் தனது வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண இங்கிலாந்து முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker