இலங்கை
கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி காரைதீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடு!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை இடம்பெற்றுவருகின்றது.
அந்த வகையில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகத்தினால் வரலாற்று சிறப்பு மிக்க காரைதீவு அருள்மிகு ஸ்ரீ காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் விசேஷட ஹோமம் விசேட வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை காலை 05.11.2020 சுகாதார வழிமுறைகளை பேணி மேற்கொள்ளப்பட்டுள்ளன.



















