கமு/திகோ/ஸ்ரீ/இராமகிருஸ்ணா கல்லுரி சாதனையாளர் பாராட்டுவிழா…

பங்களாதேசில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட கமு/திகோ/ஸ்ரீ/இராமகிருஸ்ணா கல்லூரியைச் சேர்ந்த மாணவன் 3ம் இடத்தினைப்பெற்று வெண்கல பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், பாடசாலை சமுகத்திற்கும்,திருக்கோவில் கல்வி வலயத்திற்கும், RKO சங்கத்திற்கும் பெருமையை பெற்றுத்தந்த எஸ்.ரிசோபன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் அதிபர் திருமதி.சோமபால தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக்கல்வித் பணிப்பாளர் திரு.வை.ஜெயச்சந்திரன்,பாடசாலை அதிபர் திருமதி.சோமபால, உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எச்.நூர்ஜகான், திரு.எம்.வி.ஸைனுல்அப்டீன் ,திரு.கே.கேந்திரமூர்த்தி ,பாடசாலையின் பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இன் நிகழ்வு பாடசாலை வீதி வழியாக மலர்மாலை அணிவித்து வெற்றிபெற்ற மாணவனை வலயக்கல்வித் பணிப்பாளர், அதிபர் ,பிரதிஅதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து கேட்ப்போர் கூட மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது முதல்நிகழ்வாக அதிதிகளால் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது.
இன் நிகழ்வின் எஸ்.ரிசோபன் கதாநாயகனுக்கான மெடல்,சான்றுதல் மற்றும் நினைவுச்சின்னமும் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் மற்றும் கராத்தே சங்க இணைப்பாளர் கே.கேந்திரமூர்த்தி,அதிபர் திருமதி சோமபால அவர்களினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் கிழக்குமாகாண கராத்தே போட்டியில் 20 வயதுக்கு உற்பட்ட ஆண்களுக்கான கராத்தே போட்டியில் சம்பியனாகவும்,தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்ற பி.சாரோன் சச்சின் அவர்களுக்கு ,சான்றுதல் மற்றும் நினைவுச்சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதேவேளை 20 வயதுக்கு உற்பட்ட பெண்களுக்கான கராத்தே போட்டியில் பி.சதுர்சிகா அவர்கள் 3ம் இடத்தினையும் பெற்றமைக்கான சான்றுதலும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் விஞ்ஞாபோட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் சான்றுதல் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அகில இலங்கை தமிழ் மொழித் தினம் மாகாணமட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் சான்றுதல் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ் வருடம் பாடசாலையில் குறைந்த விடுமுறையின் எடுத்துக்கொண்ட ஆசிரியரான யோ.மநோக்குமார் அவர்கட்க்குமான சான்றுதல் வழங்கி கெளரவிக்கப்பட்டது.