எத்தகைய சூழ்நிலையிலும் தாக்குதலுக்கு தயாராக இருங்கள்: வடகொரியா தலைவர் அழைப்பு!

எத்தகைய சூழ்நிலையிலும் வடகொரியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காப்பாற்ற தேவையான பெயர் குறிப்பிடப்படாத தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாக இருக்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வடகொரியா தலைவர் கிம் ஜோங் அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரியா தலைவர் கிம் ஜோங்கின் தலைமையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய உயர் அதிகாரிகளுடன் நடந்த விஷேட கூட்டத்திலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
வட கொரியா மோசமான பொருளாதார சூழல்களை எதிர்கொண்டு வருவதால் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் எனவும், வட கொரியாவில் பொருளாதார வளர்ச்சியில் தீர்க்கமான திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய பொருளாதாரத்தின் முக்கிய தொழில்துறைகளில் நிலவும் மோசமான நிலையை அவசரமாக சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் வடகொரிய தலைவர விரிவான முறையில் விளக்கம் அளித்தார்.
வடகொரியாவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கான இறுதி காலக்கெடு இந்தாண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில், இடம்பெற்ற இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



