இலங்கை
உலக மது ஒழிப்பு தினம் இன்று

இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் இன்று மூடப்படவுள்ளது.
தடையுத்தரவுகளை மீறி மதுபான விற்பனை மற்றும் அது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாளைய தினம் மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய 900 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, சர்வதேச ரீதியில் வருடாந்தம் சுமார் 3 மில்லியன் மக்கள் மதுபான பாவனையின் காரணமாக உயிரிழந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.