இலங்கை
இராணுவத் தளபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை


மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் நபர்களை முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய முன்னிலையாகாத நபர்கள் தொடர்பாக அறிந்தால் அவர்கள் தொடர்பாக தெரிவிக்க முடியும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய 011 3456548 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு இந்த விடயம் தொடர்பாக அறிவிக்க முடியும் என அவர் அறிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் நேற்று மாலை 4 மணிக்கு முன்னர் அருகில் உள்ள இடங்களுக்கு வருமாறும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.



