இலங்கை
இதுவரை 50 பேர் குணமடைவு; 133 பேர் வைத்தியசாலையில்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று (10) வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 இலிருந்து 50 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை, புதிதாக கொரோனா தொற்றிய எவரும் இன்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 190 பேரில் தற்போது 133 நோயாளிகள் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் மேலும் 242 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.