ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளராக ரெட்ணம் சுவாகர் பதவியேற்பு…

ரெட்ணம் சுவாகர் அவருக்கான நியமனத்தை பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு (05.03.2020) வழங்கியிருந்ததுடன் அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையினை சமர்ப்பித்த அவர் நேற்றைய தினம் (06) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே.லவநாதன் முன்னிலையில் வரவுப்பதிவேட்டில் கையொப்பமிட்டு கடமையினை ஆரம்பித்தார்.
அன்னமலையினை சேர்ந்த ரெட்ணம் நவமணியின் புதல்வாரான இவர் தனது ஆரம்ப கல்வியினை நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்து உயர்கல்வியினை தொடர்வதற்காக தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பிபிஏ கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அங்கு பிபிஏ கணக்கியல் பிரிவில் விசேட தரத்தினை பூர்த்தி செய்த அவர் கணக்காய்வு அதிபதி திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராக அரசசேவையில் இணைந்து கொண்டார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இலங்கை நிருவாகசேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து ஒரு வருடகால பயிற்சியினை சிலிடாவில் நிறைவு செய்த அவர் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.