ஆலையடிவேம்பு பிரதேச குழந்தைகளுக்கு ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தினரால் பால்மா பக்கெற்றுக்கள் வழங்கிவைப்பு…..

வடகீழ் பருவக் காற்றுடன் கூடிய பருவ மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கோளாவில்-01, கோளாவில்-02, கோளாவில்-03, நாவற்காடு, அக்கரைப்பற்று7/4, வச்சிக்குடா ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையில் ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் பங்களிப்பில் இன்றைய தினம் திங்கள்கிழமை (13) பி.ப 01.30 மணியளவில் ஆலையடிவேம்பு இந்து மாமன்ற கட்டிட வளாகத்தில் ஆலையடிவேம்பு இந்து மாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம் அவர்களின் தலைமையில் பயனாளிகளுக்கு பால்மா பக்கெற்றுக்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் K.லவநாதன் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் மற்றும் இந்து மாமன்ற செயலாளர், இந்து மாமன்ற பொருளாளர், இந்து மாமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் கலந்து கொண்டு சுமார் 60 பயனாளிகளுக்கு பால்மா பக்கெற்றுக்கள் வழங்கிவைத்தனர்.