அரசாங்க ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு -வெளியானது சுற்றறிக்கை

இன்று முதல் அனைத்து அரசாங்க ஊழியர்களையும் வழமை போன்று கடமைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னஸ்ரீயின் கையொப்பத்துடன் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக அமைச்சு இதுதொடர்பாக குறிப்பிடுகையில், பொதுமக்கள் சேவையை உரிய முறையில் முன்னெடுத்து நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும், கொவிட் – 19 தொற்று நிலைமை காரணமாக சுகாதார சேவை ஊழியர்களுக்காக வழங்கப்பட்டுள்ள விசேட சேவை முறை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் செல்லுபடியாகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் நோயெதிர்ப்புக்கான தடுப்பூசி இரண்டாவது சொட்டு 4 ஆம் மாதம் அளவில் இந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்பதினால் இந்த விசேட சேவை நடைமுறை 4 மாதம் 30 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.