இலங்கை
அரச பணியாளர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!


ஆசிரியர்-சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் தனது உரையில்….
அரசாங்க பணியாளர்களின் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக 500 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேபோல், சேவைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நிரந்தர நியமனம் வழங்க 7,600 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.



