இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றச்சாட்டு!

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படும். அரசாங்கம் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள பேரனர்த்தத்தினால் மனித வளங்கள் மட்டுமன்றி பௌதீக வளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டிய கடமை இந்த அரசாங்கத்திற்கு உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் கூலி தொழில் செய்வோம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை இழந்துள்ளனர். இவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக வறுமை கோட்டுக்குள் இருப்பவர்களாக மாறியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு நிவாரண தொகை வழங்கப்படுகின்றதோ அதிலும் பல மடங்கு தொகைகளை கொடுக்க வேண்டும். அவர்கள் தமது தொழில் வளங்களை இழந்து இருக்கின்றனர். அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உதவித் தொகை கொடுக்கப்படாமல் இருக்கின்றன. அவர்களிடம் வெள்ளம் வந்தமைக்கான புகைப்பட ஆதாரங்களை கேட்கின்றனர். இவர்களுக்கான நிவாரணங்களையும் உரிய முறையில் வழங்க வேண்டும்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், காரைதீவு, பொத்துவில் உள்ளிட்ட இடங்களில் மண் அரிப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. அதனால் ஆலயங்கள், விவசாய நிலங்கள், தோட்டங்கள்,வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மிகவும் புரதானமான ஆலயங்களும் மண் அரிப்பால் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் போது அதில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இந்த பிரச்சினை குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker