அனுமதி மறுக்கவில்லை – மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்டமா அதிபர்

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹஜாஸ் ஹிஸ்புல்லாவை அவரது சந்திக்க சட்டத்தரணிகள் சந்திக்க சி.ஐ.டி.யினர் அனுமதி மறுக்கவில்லை என்று சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.
தனது சட்டத்தரணிகளை அணுக அனுமதி வழங்குமாறு சி.ஐ.டி. பணிப்பாளர்க்கு நீதிமன்ற உத்தரவு கோரி அவரது சட்டத்தரணியினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபிதா ராஜகருணா ஆகியோரின் முன் நேற்று (14) விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா, ஹஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகளை சந்திக்க சி.ஐ.டி. வாய்ப்பை வழங்கவில்லை என குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
எவ்வாறாயினும் சட்டமா அதிபர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஹிஸ்புல்லாவை அவரது சட்டத்தரணிகளைச் சந்திக்க சி.ஐ.டி. அனுமதி மறுக்கவில்லை என தெரிவித்தார்.