அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி மாணவர்களின் சிறுவர் சந்தை…..

அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி (Lycieum pre school) மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று (24) காலை 9.00 மணியளவில் பாலர் பாடசாலை ஆசிரியர் திருமதி.பகீரதி ஸ்ரீதரன் தலைமையிலும் சக ஆசிரியர்கள் திருமதி.லக் ஷா பவிஷாந்த் திருமதி.ஜென் சுபானி அவர்களின் ஒழுங்குபடுத்தலுடனும் பெருந்திரளானவர்கள் வருகையுடன் கோலாகலமாக இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண அழகியல் கல்வி பணிமனையின் உதவிக்கல்வி பணிப்பாளர் S.ஸ்ரீதரன் அக்கரைப்பற்று பாலர் பாடசாலைகளின் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் P.மோகனதாஸ் ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் MA.சிதி இர்ஃபானா ஓய்வு பெற்ற பிரதம கணக்காய்வாளர் சி.கனகரெத்தினம் அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபர் K.ஜனார்த்தனன் அக்கரைப்பற்று மருது விளையாட்டு கழகம் சார்பாக J.கிருலக்சன் ஒய்வு பெற்ற முகாமைத்துவ உத்தியோகத்தர் V.வேததாசன் ஆகியவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.



