ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று, திருவள்ளுவர் வித்தியாலயத்தில் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட அக்கரைப்பற்று கமு/திகோ/திருவள்ளுவர் வித்தியாலயத்தின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்றய தினம் (30) காலை பாடசாலையின் அதிபர் திருமதி சர்மிளா சசிகரனின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் இரா. உதயகுமார், சிறப்பு விருந்தினராக தாய்ப்பாடசாலையான அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன், பாடசாலை PSI இணைப்பாளர் திரு M. யோகராஜா ஆகியவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker