YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக மாபெரும் சிரமதான பணி…..

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று YOUNG FLOWER’S விளையாட்டு கழகத்தினரால் நேற்றய தினம் (24/12/2022) காலை 08.00 மணிமுதல் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் மாபெரும் சிரமதான பணி மிகவும் சிறப்பானதாக இடம்பெற்றது.
மாலையுடன் கூடிய காலநிலை காணப்படுவதனாலும் அண்மைக்காலமாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் காணப்படுவதாலும் இவ்வாறான சிரமதான செயற்பாடுகள் முக்கியம் வாய்ந்ததாக அமைகின்றது.
இச் சிரமதான செயற்பாட்டிற்கு ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கியதுடன் மேலும் குறித்த சிரமதான பணிக்கு தேவையான வாகன உதவிகளை ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் அவர்கள் வழங்கியும் இருந்தார்.