இலங்கை

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களும் தடை !

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகச் சிக்கலைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தினமானது நீதிமன்றச் சேவைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல், மின்சக்தி மற்றும் சுங்கம் ஆகிய அரச நிறுவனங்களுக்கு இந்த விசேட விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker