தொழில்நுட்பம்

Work From Home பரிதாபங்கள்: உங்க இன்டர்நெட் ஸ்பீடா இருக்கா? செக் செய்வது எப்படி?

கொரோனா வைரஸ் பீதி மற்றும் பரவல் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலைப்பாட்டில், தொழில்நுட்பத்தை பற்றி அவ்வளவாக அறியாதவர்கள், குறிப்பாக தங்கள்

இணைய வேகம்  மற்றும் இணைய வேகம் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு அது சார்ந்த கற்றல்களை வலபிக வேண்டிய இடத்தில் நாங்கள் உள்ளோம்!

வொர்க் ப்ஃரம் ஹோம் செய்வதற்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் தான்!

நல்ல டிஜிட்டல் அனுபவத்தைப் பெறுவதற்கு வலுவான மற்றும் வேகமான இணைய வேகம் மிக முக்கியமானது. நீங்கள் வொர்க் ப்ஃரம் ஹோம் செய்வதற்கு மட்டுமல்ல இசையைப் பதிவிறக்குவது, திரைப்படங்களை ஸ்ட்ரீமிங் செய்வது அல்லது ஆன்லைன் வீடியோ கேம்களை விளையாடுவது என எல்லாவற்றிற்குமே வேகமான இணையம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இன்டர்நெட் ஸ்பீட் வேகமாக உள்ளதா? இல்லையா?

இணைய வேகம் பொதுவாக ஒரு வினாடிக்கு இத்தனை மெகாபைட் அல்லது எம்பிபிஎஸ் (Mbps) என்கிற விகிதத்தின் கீழ் கணக்கெடுக்கப்படும். அதிக எம்பிபிஎஸ் என்றால், உங்கள் இன்டர்நெட் ஸ்பீட் வேகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

உங்களுடைய இன்டர்நெட் ஸ்பீட்டை கண்டுபிடிப்பது எப்படி?

சரி இப்போது உங்கள் லேப்டாப்பின் இணைய வேகம் என்னவென்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். இதை நிகழ்த்த பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்:

01. உங்கள் லேப்டாப்பில் உங்கள் விண்டோஸைத் திறக்கவும் – நீங்கள் விண்டோஸ் 10 அல்லது வேறு ஏதேனும் ஒரு விண்டோஸைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் ஸ்க்ரீனின் கீழ் வலது மூலையில் உள்ள அப்வேர்ட்ஸ் டாஷ் பட்டனை (upwards dash button) கிளிக் செய்யவும்.

02. இப்போது Network settings-ஐ திறக்கவும் – Open Network and Internet Settings-ஐ தேர்வு செய்து ரைட்-கிளிக் செய்ய அது உங்களுக்கு Internet Settings Menu-வை காட்சிப்படுத்தும்.

03. நெட்வொர்க் அண்ட் ஷேரிங் சென்டர் (Network and sharing centre) – நீங்கள் நெட்வொர்க் மற்றும் ஷேரிங் சென்டரை தேர்ந்தெடுக்கும்போது, அது உங்களை மற்றொரு செட்டிங்ஸ் பேனலுக்கு கொண்டு செல்லும், அதில் உங்கள் தற்போதைய இணைப்பு குறித்த விவரங்கள் இருக்கும்.

04. Ethernet-ஐ தேர்வு செய்யவும் – நீங்கள் இத்தர்நெட்டைக் கிளிக் செய்த பிறகு, அது உங்கள் ஈத்தர்நெட் ஸ்டேட்டஸை காட்சிப்படுத்தும். அதில் உங்கள் இணையத்தின் அப்லோடிங் மற்றும் டவுன்லோடிங் வேகங்கள் என்ன என்பதை நீங்கள் பார்க்கலாம். ஒரு வேகமான இன்டர்நெட் ஸ்பீட் என்பது நிலையான அப்லோடிங் மற்றும் டவுன்லோடிங் “எண்களை” கொண்டிருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker