ஆலையடிவேம்பு

வேட்டையன் முழு நீள திரைப்படம் அக்கரைப்பற்று அர்ச்சனா திரையரங்கத்தில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து…..

எமது இலங்கையின் சினிமா துறையின் முதலாவது படைப்பான கோமாளி கிங்ஸ் முழு நீள திரைப்படத்தை அடுத்து இரண்டாவது படைப்பான வேட்டையன் முழு நீள திரைப்படம் நாடளாவிய ரீதியில் பல திரையரங்கங்களில் வெற்றி நடை போட்டு வருகின்றது.

இத்திரைப்படமானது நம் நாட்டில் சமூக ஊடகங்களினால் (Social Media) பெண்களுக்கு எதிராக நடக்கின்ற துஷ்பிரயோகத்தினை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தினை அக்கரைப்பற்று அர்ச்சனா திரையரங்கத்தில் வெளியிடுவதற்காக வேட்டையன் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

இத்திரைப்படத்தில் விநாயகபுரத்தை சேர்ந்த
S.சபேசன் (Shakthi Super Star) அவர்களும் இரண்டு பாடல்களும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டு கலைஞர்களுக்கு தகுந்த ஆதரவை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர் வேட்டையன் குழுவினர்.

இத்திரைப்படத்திற்கான ஆசனச்சீட்டு – 150/= இது மூலம் கிடைக்கின்ற பணத்தினை வறிய குழந்தைகளுக்கு வழங்கப்படும் எனவும் படக்குழுவினர் தீர்மானித்து உள்ளனர்.

With Supporting By #S.Hirushman

Producer – Bharaneetharan
Director – S.n. Vishnujan
Actor- Dirushan
Music – A.Nandrew
Editor – Abishek

https://www.facebook.com/Jadursa.Studio/videos/3078404439050528/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker