இலங்கை
பாதுக்கையில் நபரொருவர் வெட்டி கொலை – நடந்தது என்ன?


பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னான கம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (10) 7.00 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துன்னான கம்மெத்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இதுவரை இனங்காணப்பட்டாத நிலையில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



