இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களது சொத்து விவரம்! முழுமை விபரம்….

சுமந்திரனின் சொத்து மதிப்பை நீங்களும் அறிந்துகொள்ளலாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் பிறரால் பேசப்படுபவர் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அவர் குறித்துப் பல்வேறு சாதக, பாதக விமர்சனங்கள் இருந்தாலும் அவர் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார் என்று அறிந்ததும், அவர் தொடர்பில் சாதக, பாதக விமர்சனக் கருத்துடைய இருதிறத்தாரும் அவருடைய விவரங்களை அறியவேண்டும் என்ற பேரவாவில் உள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட  விளம்பரம்

 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் பகிரங்கமாக மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும் என transparency international அமைப்பு தொடர் கோரிக்கை வைத்திருந்தது.

அந்தக் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் நேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ M.A சுமந்திரன், கெளரவ வாசுதேவ நாணயக்கார, கெளரவ தாரக பாலசூரிய, கெளரவ எரான் விக்ரமரத்ன, விதுர விக்கிரமநாயக்க ஆகிய ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விவரத்தை அறிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

 

சுமந்திரன் தொடர்பில் அனைவரும் எதிர்பார்ப்பது அவர் மிகவும் செல்வாக்குள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இன்று நாட்டை நிர்ணயிப்பவராகவே அவர் காணப்படுகின்றார். ஒரு மிகவும் திறமைவாய்ந்த – சட்ட ஆளுமையுடைய – ஜனாதிபதி சட்டத்தரணி. பல கோடிகளுக்’கு அதிபதியாக இருப்பார் என்று யாரும் எண்ணலாம். ஆனால், அவ்வளவுக்கு பெருந்தொகைப் பணம் அவரிடம் இருப்பதாகத் தோன்றவில்லை. இருப்பவற்றில் பெரும்பாலானவை அவர் 2010 ஆம் ஆண்டு அரசியல்வாதி ஆகி, நாடாளுமன்றுக்குச் செல்வதற்கு முதல் கொள்வனவு செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மாதாந்த சம்பளம் 51285 ரூபா
சாவித்திரி சுமந்திரன் பணிபுரியும் நிறுவனத்தில் பெறும் ஊதியம் 1,100 அமெரிக்க டொலர்
சொய்சாபுரத்தில் வாழ்க்கைத் துணைக்கு ஒரு தொடர்மாடி (இது நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் 23 மே 1999 கொள்வனவுசெய்யப்பட்டது)

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

 

றிச்சாட் பேர்ஸ் என்ற பங்குச் சந்தையில் மனைவியின் பெயரில் 100 பங்குகள்
சாவித்திரியின் பெயரில் 5 லட்சம் ரூபா பெறுமதியான நகைகள்
மோட்டார் கார்கள் 03
சுமந்திரனின் பெயரில் 2 வீடுகள்
சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு (இவை அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டவை)
பயன்பெறு காணி ஒன்று
2014 ஆம் ஆண்டு ஒரு காணி கொள்வனவு செய்திருக்கின்றார்.
ஹற்றன் நஷனல் வங்கி வெள்ளவத்தையில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 356 ரூபா பணம் வைப்பில் உள்ளது.
நாடாளுமன்ற இலங்கை வங்கிக் கிளையில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 228 ரூபா பணம் வைப்பில் உள்ளது.

இதுவே சுமந்திரனின் சொத்தின் பெறுமதி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker