ஆலையடிவேம்பு
O/L மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்கு அறம் வழி அறக்கட்டளை அமைப்பின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பம்.

அறம் வழி அறக்கட்டளையின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒன்றாக இன்று (28) திகோ/பனங்காடு பாசுபதேஸ்வரர் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான தொடர் கருத்தரங்கு வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டன.
இவ் கருத்தரங்கில் பனங்காடு பாசுபதேஸ்வரர் வித்தியாலயம், தேவகிராமம் சென் ஜோசப் வித்தியாலயம் கண்ணகிபுரம் கண்ணகிவித்தியாலயங்களை சேர்ந்த சுமார் 60ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து பயனடையவுள்ளனர்.
இத்தொடர் கருத்தரங்குகளுக்கு பூரண அனுசரணையினை அறக்கட்டளையின் பணிப்பாளரில் ஒருவரான திரு சியாம் சுஜிதாஸ் அவர்கள் வழங்குகின்றார்.