நலிவுற்ற சமூகத்தினருக்கு கிடைக்க கூடிய அனைத்து சேவைகள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவூட்டல்…

நலிவுற்ற சமூகத்தினருக்கு கிடைக்க கூடிய அனைத்து சேவைகள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவூட்டல். இன்று சமூக அபிவிருத்தி கட்சியினரால் ஒழுங்கமைக்க பட்ட மக்களுடனான விசேடகிராம மட்ட கலந்துரையாடலின் போதே சமூக சேவைகள் திணைக்களம் தொடர்பாக மக்களுக்கு வழங்க படக்கூடிய சேவைகள் மற்றும் முதியோர் தேசிய செயலக சேவைகள் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
மூதூர் கட்டை பரிச்சான் விபுலானந்தர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக சமூக அபிவிருத்தி கட்சியின் செயலாளர் கே.பிரகாஸ் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் திருமதி கே.சுகந்தினி மற்றும் சமூக அபிவிருத்தி கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கட்டைபறிச்சான், சம்பூர் பாட்டாலிபுரம் கிராமத்தை சேர்ந்தமாற்று திறனாளிகள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் முதியோர்கள் இளைஞர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். மேலும் சமூக சேவை உத்தியோகஸ்தர் திருமதி கே.சுகந்தினி அவர்கள் மாற்று திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அவர்களுக்கான வீட்டு திட்ட வசதிகள் முதியோர் நல நோன்பு திட்டங்கள் பெண் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தும் குடும்பங்கள் பெற்று கொள்ளகூடிய மானிய சேவைகள் என்பன பற்றியும் அவற்றினை பெற்று கொள்வதற்கான அணுகுமுறைகள் தொடர்பாகவும் விளக்கம் அளித்து இருந்தார்