கல்வி

GRADE 10 MATHS UNIT 1. சுற்றளவு

1. சுற்றளவு

தளவுரு ஒன்றின் சுற்றிவர உள்ள நீளம் சுற்றளவு எனப்படும்.

இனி நாம் ஒவ்வொரு தளவுருக்களின் சுற்றளவுகளை எவ்வாறு கணிப்பது என்றுபார்ப்போம்.

முதலில் செவ்வகம் ஒன்றின் சுற்றளவை எவ்வாறு கணிப்பது எனப் பார்ப்போம்.

செவ்வகத்தின் எதிர்பக்கத்தில் உள்ள நீளங்கள் , அகலங்கள் சமன் என்பதைஞாபகப்படுத்தவும் , இந்தச் செவ்வகத்தின் நீளம் = 7 , அகலம் =3 அத்துடன் இதைச்சுற்றி அளந்தால் (7+3+7+3 20) ஆகவே இச் செவ்வகத்தின் சுற்றளவு 20 அலகுகள் ஆகும்.

செவ்வகத்தின் சுற்றளவு = 2 மடங்கு நீளம் + 2 மடங்கு அகலம்

   ஆகவே செவ்வகத்தின் சுற்றளவை காண்பதற்கான சமன்பாடு .

சதுரம் ஒன்றின் சுற்றளவைக் காணல்

சதுரம் ஒன்றின் நான்கு பக்க நீளங்களும் சமன் என்பதை ஞாபகப்படுத்துங்கள்.

இந்தச் சதுரத்தின் நீளம் = 5 , அகலம் =5 அத்துடன் இதைச் சுற்றி அளந்தால்(5+5+5+5 20) ஆகவே இச் சதுரத்தின் சுற்றளவு 20 அலகுகள் ஆகும்.

ஆகவே சதுரத்தின் சுற்றளவை காண்பதற்கான சமன்பாடு .

அடுத்ததாக நாம் முக்கோணியின் சுற்றளவை எவ்வாறுகாண்பது எனப் பார்ப்போம்.

 

முக்கோணியின் சுற்றளவானது , முக்கோணியின் மூன்று பக்கத்தையும்கூட்டுவதன் மூலம் பெறப்படும்.

 + ம்:

உருவில் உள்ள முக்கோணியின் சுற்றளவு = 9 + 11 + 10 = 30 cm

 

அடுத்ததாக நாம் வட்டத்தின் சுற்றளவை எவ்வாறுகாண்பது எனப் பார்ப்போம்.

வட்டத்தின் சுற்றளவு பரிதி எனப்படும் , உதாரணத்திற்கு கீழே உள்ள வட்டத்தைகருதுக.

ஆரைச் சிறை ஒன்றின் சுற்றளவை அளத்தல்.

தமிழ் மொழி மூலக் காணொளி : பகுதி : 01

 தமிழ் மொழி மூலக் காணொளி : பகுதி : 02

தமிழ் மொழி மூலக் காணொளி : பகுதி : 03

 

 மாதிரி வினாக்களும் , விடைகளும் :

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker