ஆலையடிவேம்பு
Trending
“CLEAN SRILANKA” வேலைத்திட்டம் கீழ் அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் சிரமதானம்….

“CLEAN SRILANKA” வேலைத் திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதானம் இன்றைய தினம் (09) காலை 7.30 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆ.தர்மதாச தலைமையில் இடம்பெற்றது.
குறித்த சிரமதானத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் க.ரகுபதி, கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் ரா.சுரேஷ்ராம், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.