ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலய உற்சவத்தை முன்னிட்டு சிரமதானம்….

ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இன்றைய தினம் (26) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயத்தில் சுற்றுச்சூழல் வளாகத்தில் சிரமதான பணிகளை மேற்கொண்டிருந்தார்கள்.
அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயத்தின் மகோற்சவம் கோலாகலமாக இடப்பெற இருக்கின்ற நிலையில் குறித்த சிரமதான பணி ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் தலைவர் க.சுந்தரலிங்கம் தலைமையிலும் அமைப்பின் அங்கத்தவர்கள் பங்களிப்புடன் நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் வருடந்தோறும் இதுபோன்ற சிரமதானப்பணிகளை பல ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.