தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை
புலோப்பளை மக்களுடனான சந்திப்பு இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “அண்மையில் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவரும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரனான பசில் ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்.
அவரின் சகோதரன் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது இரண்டு வரவு செலவு திட்டங்களிற்கு நாம் ஆதரவளித்து இருக்கிறோம். எங்கள் இனத்தின் நிரந்தர அரசியல் தீர்விற்காகவே நாம் ஆதரவளித்திருந்தோம். நாம் அவர்களோடு19 தடவைகள் நாங்கள் பேசியிருக்கிறோம்.
19 தடவைகளும் பொய்களையும் பிரட்டுக்களையும் கூறினார்கள் ஆனால் அவர்கள் எந்தவிதமான தீர்வுகளையும் தரவில்லை.13+ ஐ கொடுக்கப் போவதாக கூறி எம்மை ஏமாற்றியவர்கள் இப்போது 13 ம் இல்லை என்கிறார்கள்.
இப்போது வடக்கு மாகாணம் முழுவதும் புதிதாக இராணுவ சோதனை சாவடிகள் முளைத்திருக்கின்றன. இதனால் இந்த நாடு முழுவதும் ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது.
இந்த விடயங்களை சிங்கள மக்கள் நன்கு புரிந்து விட்டார்கள் ராஜபக்சாகளின் இராணுவ ஆட்சியை நன்று விளங்கிவிட்டார்கள் இவர்களின் உண்மை நிலைப்பாட்டை சில சிங்கள கட்சிகள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் தோற்று விடுவோமோ னிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற பீதி ராஜபக்சாக்களை ஆட்கொண்டுள்ளது அவர் தெரிவித்தார்