இலங்கை
கொரோனா வைரஸ் அச்சம் – மேலும் 210 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடு திரும்ப முடியாது சிக்கித் தவித்த மேலும் 210 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.
அதன்படி கனடாவிலிருந்து 130 பேரும் கட்டாரிலிருந்து 80 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து மற்றொரு குழு இன்றைய தினம் நாடு திரும்பும் என கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.