ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு…

வி.சுகிர்தகுமார்
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று நோய் அச்சத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அன்றாட தொழிலாளர்கள் மற்றும் வருமானம் குறைந்த பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மக்கள் அன்றாட உணவுத்தேவையினை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையும் உருவாகி வருகின்றது.
இதன் காரணமாக பல்வேறு சமூக அமைப்புக்களும் நலன் விரும்பிகளும் இணைந்து குறித்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கும் பணியை கொடையாளர்களின் உதவியுடன் நாடாளவிய ரீதியில் மனிதாபிமான முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேத்தில் ஒன்றிணைந்த அன்புக்கரங்கள் எனும் குழுவினர் சில நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட உலர் உணவினை பொதி செய்து மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றனர்.
நேற்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பணிக்கு பல உதவிக்கரங்களின் கைகள் உதவி செய்து வருவதுடன் தொடரும் நாட்களிலும் இப்பணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இக்கட்டான இச்சூழ்நிலையிலும் இப்பணியில் இணைந்து கொண்ட அனைவருக்கும் அன்புக்கரங்கள் குழுவினர் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டனர்.