தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் – விளக்கம் கூறிய அமைச்சர்!

இந்தியாவில் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயின் காரணமாக இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி மருந்து கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாக கூடும் என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் மிணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதுதெபாடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படவுள்ள கொரோனா தடுப்பூசி தொடர்பில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுவதாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இன்னும் 1 மில்லியன் தடுப்பூசி மருந்து கிடைக்கவுள்ளது. சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயினால் சிறிய தாமதம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த நிறுவனம் எம்மால் முன்வைக்கப்பட்ட பெறுகை கோரிக்கையை மதிப்பதாக தெரிவித்துள்ளது. முடிந்த வரையில் விரைவாக தடுப்பூசி மருந்தை விநியோகிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.