அக்கரைப்பற்று பிரதேச திருவள்ளுவர் வித்தியாலயத்தில் பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு….

அக்கரைப்பற்று பிரதேச கமு/திகோ/ திருவள்ளுவர் வித்தியாலயத்தில் பிரதான முகப்பு வாயில் பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு நேற்று (21.12.2022) புதன்கிழமை பாடசாலை அதிபர் திரு.M. தங்கேஸ்வரன் அவர்கள் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிகல்வி பணிப்பாளர் திரு .K.கமலமோகனதாசன் அவர்களும் விசேட அதிதிகளாக அருள் தந்தை ஜெரிஷ்டன் வின்சென்ட், போதகர்களான k.ரவிகரன் மற்றும் T.உதயகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
திறந்து வைக்கப்பட்ட முகப்பு வாயில் பெயர் பலகை சத்தியம் ‘வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் அனுசரணையில் அமைத்துக்கொடுக்கப்பட்டமை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த ஒளிவிழா நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் பலவும் கோலாகலமாக இடம்பெற்றது.