ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரினால் அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் மாபெரும் சிரமானப்பணி…

வி.சுகிர்தகுமார், ரா.அபிராஜ்
ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பல்வேறு சமய சமூக பணிகளை அம்பாரை மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் மாபெரும் சிரமானப்பணியினை இன்று முன்னெடுத்தனர்.
அமைப்பின் தலைவர் க.சுந்தலிங்கம் தலைமையில் அமைப்பின் ஆலேசாகரும் ஓய்வு பெற்ற அம்பாரை மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் எஸ்.கனகரெத்தினத்தின் வழிகாட்டலில் இடம்பெற்ற சிரமதானப்பணியில் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா இம்மாதம் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இச்சிரமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சிரமதானப்பணியில் இணைந்து கொண்டவர்கள் வளாகத்தில் புற்களை துப்பரவு செய்ததுடன் வீசப்பட்டிருந்த போத்தல்கள் பிளாஸ்டிக் பைகள் சிரட்டைகள் குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதேவேளை இச்சிரமதானப்பணியில் இணைந்து கொண்டவர்களுக்கான தாக சாந்தியும் சிற்றுண்டிகளும் ஆலய திருவிழா குழுவினரால் வழங்கப்பட்டன.