ஆலையடிவேம்பு
திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் திறமையை ஊக்குவிக்கும் முகமாக இடம்பெற்ற நிகழ்ச்சி

திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக அப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களினால் கலைநிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இன் நிகழ்ச்சிகள் யாவும் காலை 10.00 மணியளவில் திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் ஆரம்பமாகி பிற்பகல் 12.30 மணியளவில் முடிவடைந்தது. இதன்போது மாணவர்களின் ஒழுக்கம் சம்மந்தமான பேச்சு, குழுநடனம், தனிநடனம், “எமது சூழலை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டது. அப் பாடசாலை ஆசிரியர்களால் மாணவர்களுக்கு புத்திமதிகளும் ஒழுக்க விழுமியங்களும் போதிக்கப்பட்டது.
இதன்போது அமரர்.பூபாலப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டதும் குறிப்பிப்பிடத்தக்கது.