தொழில்நுட்பம்

BIG BAD WOLF புத்தகம் விற்பனை திருவிழா மீண்டும் ஒரு முறை ONLINE இல்!

உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனைத் திருவிழாவுக்குத் தயாராகுங்கள். BIG BAD WOLF புத்தக விற்பனை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இலங்கைக்கு மற்றொருமுறை இணையவழியினூடாக வருகின்றது. புத்தக விற்பனையானது நம்மைச் சுற்றிவரும் அதேவேளையில் அதன் Wolf pack மற்றும் புத்தக ஆர்வலர்களிடையே மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றது.

இணையவழியிலான புத்தக விற்பனையானது எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை இது மிகப்பெரியதும் மற்றும் சிறந்ததான அனுபவத்தையும் பெற்றுத் தருவதாக இருக்கும். அதிசயமாக விலைக் கழிவுகளுடன் இந்தப் புத்தக விற்பனை உங்களுக்கு புதிய அனுபவத்தைத் தரக் காத்திருக்கின்றது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணையவழியிலான புத்தக விற்பனை வடிவத்துடன் முதன்மையாக wolf pack தங்களது பிரதிகளை வழங்குகின்றது. இதனால் தங்கள் சொந்த வீடுகளின் வதியாகவும் பாதுகாப்புடனும் புத்தக விற்பனையை அனுபவிக்க முடியும்.

அத்துடன் சர்வதேச பயணங்களும் கட்டுப்பாடுகளுடன் இருப்பதால் கடந்த ஆண்டின் இணைவழி விற்பனை சுட்டிக்காட்டியுள்ளபடி, WOLF இணையவழியினூடாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த ஆண்டின் இணைய வழி விற்பனை அனைத்து அம்சங்களிலும் மேம்பாடுகளைக் காணும், கடந்த ஆண்டின் முதல் இணைய வழி விற்பனையை முன்னெடுத்ததன் மூலம் இது செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கண்டறிய உதவியுள்து.

இந்த ஆண்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Big Bad Wolf இணையவழி புத்தக விற்பனை புனைகதை, அதிகம் விற்பனையான புத்தகங்கள் (bestsellers), இலக்கியம், புனைகதை அல்லாத, வணிகம், சமையல் புத்தகங்கள், கலை மற்றும் வடிவமைப்பு, அத்துடன் 50,000 இற்கும் மேற்பட்ட புதிய ஆங்கில புத்தக தலைப்புகளின் தேர்வைக் காண்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. coffee table புத்தகங்கள், பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலையிலிருந்து 90% வரை பெரும் சேமிப்புடன் வழங்கப்படுகின்றன.

24 மணிநேர இணைய வழி கொள்முதல் அனுபவத்தை இன்னும் மென்மையான வீட்டு விநியோக சேவையுடன் வழங்க இணைய வழி விற்பனை மேலும் உருவாக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker