ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வருடத்தின் முதல் கடமை நாள் ஊழியர்கள் சத்தியபிரமாணம்: தவிசாளர் த.கிரோஜாதரனின் புதிய வருடப்பிறப்பின் வாழ்த்து செய்தி…

ஆலையடிவேம்பு பிரதேச சபையில் இன்று (01) கௌரவ தவிசாளர் த.கிரோஜாதரன் தலைமையில் புதிய வருடப்பிறப்பினை முன்னிட்டு முதல் கடமை நாள் உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு மற்றும் பிரதேச சபை வளாகத்தில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த புத்தாண்டு எல்லோருக்கும் சுபிட்சமாகவும் நோயற்ற வாழ்வினை பெற இறைவனை பிரார்த்தனை மேற்கொள்வதுடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாதரன் அவர்கள் தனது வாழ்த்து செய்தியினையும் தெரிவித்திருந்தார்.