இலங்கை
வடமேல் மாகாணத்தில் அனைத்து மேலதிக வகுப்புக்களுக்கும் தடை…!

மீண்டும் அறிவிக்கும் வரை வடமேல் மாகாணத்தில் அனைத்து மேலதிக வகுப்பு கற்பித்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அந்த மாகாணத்தின் ஆளுநர் ராஜா கொல்லுரே அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலினை தடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த பணிப்புரையினை வழங்கியுள்ளார்.
கல்வி பொது தராதர பத்திர உயர்தர மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து மேலதிக வகுப்புக்களையும் நடத்த வேண்டாம் என வடமேல் மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.