ஆலையடிவேம்பு மக்கள் வங்கி உப கிளைக்கான ATM இயந்திரம் பொருத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்.

-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று காணப்பட்டுவந்த நிலையில்.
தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நிறுவிட வேண்டும் என பிரதேச மக்களின் பலரது கூட்டு முயற்ச்சி காரணமாக தற்போது ஆலையடிவேம்பு மக்கள் வங்கி உப கிளைக்கான தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) பொருத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
குறித்த (ATM) பொருத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது பிரதேச மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளதுடன் மேலும் இது கிடைக்கப்பெற உறுதுணையாக இருந்த பிரதேச தன்னார்வம் கொண்டவர்கள், இளைஞர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் சார்ந்தவர்கள் என பல்முனைப்பு வழிமுறைக்கள் மூலமாக முயற்ச்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பிரதேச மக்கள் தெரிவித்துக்கொள்கின்றனர்.