Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழுவினரினால் ”மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்டம்” : ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற பங்களிப்புடன் நாளை!

கொரோனா (கோவிட் 19) தொற்றுநோய் பரவல் உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி சமூக மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது இதனை போன்றே எமது நாட்டிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த கொரோனா தாக்கத்தினை எமது ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு தொடா்பில் துண்டுப்பிரசுரத்துடன் கூடிய விழிப்புணர்வு , முகக்கவசமின்றிக் காணப்பட்டவா்களுக்கு முகக்கவசங்கள்வழங்கல் மேலும் ”கொரோனா வைரஸ் முற்பாதுகாப்பு உதவித்திட்டம்” எனும் கருத்திட்டத்துக்கு அமைவாக தனவந்தர்களிடம் இருந்து தன்னார்வமாக வழங்கப்படும் நிதி உதவியினை பெற்று சேமித்து கொரோனா நிலை எமது பிரதேசத்தில் தீவிரம் அடைந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நலிவடைந்த குடும்பங்களுக்கு உதவி வழங்கல் எனும் தூரநோக்கு செயத்திட்டத்தினையும்.
மேற்கொண்டு விழிப்புணா்வினை ஏற்படுத்தி பிரதேச மக்களை கொரோனா வைரஸ் தொற்று கொடிய நோயில் இருந்து பாதுகாக்கும் முகமாக Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழு ஆகிய நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.
இச் செயத்திட்டம் (14/11/2020) சனிக்கிழமை மற்றும் (15/11/2020) ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இச் செயத்திட்டமானது ஆலையடிவேம்பு பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் என்பவற்றின் பங்களிப்புடனும் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அவா்களின் அறிவுறுத்தலுகளுக்கமைவாகவும் Alayadivembuweb.lk இணையத்தள இணையக்குழுவினரினால் மாபெரும் கொரோனா தடுப்பு முற்பாதுகாப்பு செயத்திட்ட விழிப்புணா்வுச் செயற்பாடானது இடம்பெற உள்ளது.