ஆலையடிவேம்பு
Alayadivembuweb.lk இணையத்தளத்தின் இணையக்குழு உறுப்பினர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வு…..

Alayadivembuweb.lk இணையத்தளத்தின் இணையக்குழு உறுப்பினர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வு நேற்று (17) மாலை 5.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற மண்டபத்த்தில் Alayadivembuweb.lk இணையத்தளத்தின் இயக்குனர் M.கிரிசாந் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அதிதிகளாக சட்டத்தரணி K.ஜெயசுதன் மற்றும் திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் N.சுதாகரன் என்பவர்கள் வருகைதந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் இணையக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமையுடன் மேலும் எமது பிரதேசத்தை பிரதிபலித்து இயங்கிவருகின்ற Alayadivembuweb.lk இணையத்தளத்திற்கு எங்கள் ஒத்துழைப்பு என்றென்றும் காணப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.