AI பயனாளர்களின் நினைவுத் திறன் பாதிப்பு! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts institute of technology ) செயற்கை நுண்ணறிவு தலமான chatgpt பயனாளர்களின் மூளையின் செயற்பாட்டை ஆராய்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் chatgpt பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக chatgpt பயனாளர்கள் பலருக்கு சில நிமிடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு வாக்கியத்தை நினைவில் வைத்து கொள்ள முடியவில்லை என்றும் அதே வேளையில் AI பயன்படுத்தாமல் எழுதியவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.