ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் ஏற்பாட்டில் சேவையாளர் மற்றும் சாதனையாளர் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் ஏற்பாட்டில் சேவையாளர் மற்றும் சாதனையாளர் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (04.09.2022) மாலை 05.00 மணியளவில் இந்துமாமன்ற வளாகத்தில் இந்துமாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் திருவாளர் கந்தையா குகநாதன் அவர்களின் சமூகசேவையை பாராட்டி வாழ்த்துப்பாவும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் 2021 க.பொ.த உயர்தரத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை கலைப்பிரிவில் பெற்ற செல்வி லவன் பிரேம்சனா அவர்களுக்கு விருது வழங்கி பிரேம்சனா மற்றும் அவரின் தயார் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வு சிறந்த முறையில் இடம்பெற்றதுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பங்குகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.