மத்தியமுகாம் சலஞ்சஸ் விளையாட்டு கழகத்தினரின் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு….

மத்தியமுகாம் சலஞ்சஸ் விளையாட்டு கழகத்தினால் இவ் வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான கணிதம் மற்றும் வரலாறு படங்களுக்கான இலவச கல்வி கருத்தரங்கு கமு /சது றாணமாடு இந்து கல்லூரியில் தினாகரம்பிள்ளை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கமு /சது றாணமாடு இந்து கல்லூரி , மட்/ பட் மண்டூர் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் (13ம் கிராமம்), கமு/சது வாணி மகா வித்தியாலயம் (4ம் கிராமம்) ஆகிய பாடசாலைகளை ஒன்றிணைத்து க.பொ.த சாதாரண தர பொது பரீட்சையை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்காக திறமைமிகு விரிவுரையாளர்களை கொண்டு கணித பாடத்துக்கான கருத்தரங்கு இன்று ( 2023/05/13) வெற்றிகரமாக இடம் பெற்றதுடன்.
மேலும் நாளைய தினம் (2023/05/14) வரலாறு பாடத்துக்கான கருத்தரங்குக்கு கமு /சது றாணமாடு இந்து கல்லூரி தினாகரம்பிள்ளை மண்டபத்தில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.